Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை’ – உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! | Supreme Court stays Uttarakhand, UP govt orders asking eateries on Kanwar Yatra route

உத்தரப்பிரதேசத்தில் கங்கையை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் சிவ பக்தர்கள் நடைபயணம் செய்து, கங்கையில் நீர் எடுத்து தங்கள் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்வு கான்வர் யாத்திரை என கூறப்படும். இந்த நிலையில், யாத்திரைக்கு செல்லும் பகுதியில் இருக்கும் கடைகளில் பண்டங்களின் பெயர்களுடன் சேர்த்து, கடை உரிமையாளரின் பெயரும் இடம்பெற வேண்டும் என அண்மையில் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.

கன்வார் யாத்திரைகன்வார் யாத்திரை

கன்வார் யாத்திரை

இதைப் பின்பற்றி, உத்தரகாண்ட், மத்தியப்பிரதேச அரசுகளும் அதே உத்தரவை வெளியிட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், என்.டி.ஏ-கூட்டணியில் இருக்கும் ஜே.டி.யூ உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *