Kanwar Yatra: உணவகங்களில் பெயர்ப்பலகை… உ.பி-யில் யோகி சர்ச்சை உத்தரவும் பின்னணியும்! | The owners of all eateries on kanwar yatra route in uttar pradesh should display their names

‘நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை இது’ என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியும், ‘அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் மதவெறி இது’ என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெராவும் விமர்சித்திருக்கிறார்கள். யோகி அரசின் இந்த நடவடிக்கையை அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்றும் கெரா கூறியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
Rajesh Kumar Singh

பா.ஜ.க-வின் கோட்டை என்று கருதப்பட்ட உ.பி-யில், கடந்த மக்களவைத் தேர்தலில் பின்னடைவை பா.ஜ.க சந்தித்தது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க-வுக்குள் கோஷ்டி மோதல்கள் அதிகாரித்து, அதிகார யுத்தம் உச்சத்தை அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த விவகாரத்தால், முதல்வர் யோகியின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டிருக்கிறது. விரைவில் உ.பி-யில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், உணவக உரிமையாளர்களின் பெயர்களை எழுதிவைக்க வேண்டும் என்ற உத்தரவின் மூலம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி திசை மாற்றம் செய்ய முயற்சி நடைபெறுவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *