Kargil: “இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" – பிரதமர் மோடி காட்டம்

ஜூலை 26, 1999 அன்று, லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் ஏறக்குறைய மூன்று மாத கால ‘ஆபரேஷன் விஜய்’ என்ற நடவடிக்கைப் பிறகு இந்திய ராணுவம் தனது வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 கார்கில் விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது,“கார்கில் இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

பிரதமர் மோடி

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது. பாகிஸ்தான் தவறு செய்த போதெல்லாம் தோல்வியைச் சந்தித்தது. அது தன் வரலாற்றிலிருந்து எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு என் அஞ்சலி. தேசத்துக்காக அவர்களின் தியாகம் என்றும் அழியாதது ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்த தினம் நினைவுகூரப்படும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒவ்வொருவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுக்கினால் அடக்கி ஒடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து அக்னிவீர் திட்டம் குறித்து பேசிய மோடி, “சிலரது எண்ணங்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஓய்வூதிய பணத்தை மிச்சப்படுத்த அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தவறான கருத்தை பரப்புகின்றனர். ராணுவம் எடுத்த இந்த முடிவுக்கு நாங்கள் மதிப்பளித்துள்ளோம். காரணம் இது ‘ராஷ்டிரநீதி’, ‘ராஜ்நீதி’ அல்ல..

நாட்டு இளைஞர்களை தவறாக வழிநடத்துபவர்களின் சரித்திரம் அவர்களுக்கு ராணுவ வீரர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. `ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்’ என்று பொய் சொன்னவர்கள் இவர்கள்தான். ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கியது நமது அரசுதான். போர் நினைவு சின்னம் கட்டாதவர்கள் இவர்கள்தான்… எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு போதிய குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்காதவர்கள் அவர்கள்’’ என சாடினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *