2018-லிருந்தே லேட்டரில் என்ட்ரி மூலம் வெளிநபர்களை உயர் அரசுப் பதவிகளில் நியமிக்கும் வேலைகள் நடைபெற ஆரம்பித்துவிட்டது என்றாலும், தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்திருக்கும் சூழலில், லேட்டரல் என்ட்ரியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றன. லேட்டரல் என்ட்ரி முறையால் இடஒதுக்கீடு ஒழித்துக்கப்படும் என்ற அச்சம் எழுப்பப்படுகிறது. ‘இது, பட்டியலின, பழங்குடியின, ஓ.பி.சி சமூகத்தினர் மீதான தாக்குதல்’ என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘யு.பி.எஸ்.சி-க்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் மூலமாக அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அரசியலமைப்பை பிரதமர் மோடி தாக்குகிறார்’ என்று விமர்சித்திருக்கிறார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் சொல்லியிருக்கிறார். ‘காங்கிரஸ் ஆட்சியில் லேட்டரல் என்ட்ரி முறை மூலமாகத்தான் மன்மோகன் சிங் அரசுப் பதவிக்கு வந்தார். லேட்டரல் என்ட்ரி முறையால் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது’ என்று சட்ட அமைச்சர் பதில் கூறியிருக்கிறார். ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு சட்ட அமைச்சர் பதில் சொல்லிவிட்டார். ‘லேட்டரல் என்ட்ரி தவறானது’ என்ற மத்திய அமைச்சரான சிராக் பாஸ்வானின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர்களோ, பிரதமர் மோடியோ பதில் சொல்வார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88