Live சுதந்திர தினம்: செங்கோட்டையில் நாளை 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! | PM narendra Modi to address the nation on independence day

11-வது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள பிரதமர் மோடி! 

பிரதமர் மோடி கடந்த ஆண்டு 10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றி, மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார். அப்போது அடுத்த ஆண்டும் பாஜக அரசு அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர். “2019-ல், செயல்திறன் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஒருமுறை ஆசீர்வதித்தீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கானது. 2047-ன் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன்” என்றார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணி கட்சி பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன்படி பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி

பிரதமர் மோடி

அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார். சுதந்தத தின உரையில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் நாளைய பிரதமர் உரை குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *