Maharashtra: எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர ஹோட்டல்களில் பத்திரப்படுத்திய கட்சிகள்… பரபர MLC Elections | Maharashtra MLC elections: Resort politics back as

10 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். தேர்தலுக்கு முன்பு எம்.எல்.ஏ-க்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்.எல்.ஏ-க்களை தனித்தனியாக நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை மத்திய மும்பையில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார். அவர்களுக்கு சிறப்பு இரவு விருந்து கொடுத்து உத்தவ் தாக்கரே அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாந்த்ராவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலிலும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கஃப்பரேடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

ஷிண்டே, அஜித்பவார்ஷிண்டே, அஜித்பவார்

ஷிண்டே, அஜித்பவார்

இதே போன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தனியாக ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநில தலைவர் நானா பட்டோலே இரவு விருந்து கொடுத்து கவனித்தார். அஜித் பவாரும் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை மத்திய மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார். அனைவரும் நாளை தேர்தல் நடக்கும் போதுதான் வெளியில் அழைத்து வரப்படுவார்கள். அதுவரை எம்.எல்.ஏ-க்களுக்கு அரசியல் கட்சிகள் தடபுடல் விருந்து கொடுத்து கவனித்து வருகின்றன. அஜித் பவார் தான் சற்று கலக்கத்தில் இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *