Maharashtra: சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்! – அதிருப்தியில் ஷிண்டே சிவசேனா? | CP Radhakrishnan appointed as maharashtra governor

மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், 2023-ம் பிப்ரவரி 18-ம் தேதி மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ரமேஷ் பயாஸ் பதவிக்காலம் வரும் 28-ம் தேதி முடிவடைகிறது. ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். சில மாநிலங்களில் 5 ஆண்டுகளை கடந்த பிறகும் ஆளுநர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவிற்கு தற்போது ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுராக பதவியேற்க இருக்கிறார். இதற்கு முன்பு ஆளுநராக இருந்த பகத் சிங் கொஷாரியா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதோடு, எப்போதும் தனது பெயர் மீடியாவில் வரும்படி பார்த்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *