இன்னும், ஏராளமான உயிரிழப்புகள், பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள், காவல்துறை மற்றும் மத்திய, மாநில அரசின் அலட்சியம் என வன்முறை போக்குகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட முதல்வர் கான்வாய் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், மணிப்பூரில் இனியும் வன்முறை கூடாது எனவும், விரைவில் இரு சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
மணிப்பூர் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக டெல்லியில் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ, காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.