Manual Scavenging: `6 மாதங்களில் 43 பேர் பலி; மலக்குழி மரணங்களை மறந்துபோன Budget’ – பெஸ்வாடா வில்சன் | 43 died while cleaning sewers, septic tanks in 6 months, but Budget remain silent, says Bezwada Wilson

2024-25 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்தார்.‌ இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், `மத்திய அரசுக்கு மலக்குழி மரணங்களைத் தடுத்து நிறுத்தும் எண்ணம், துளியும் இல்லை” என சஃபை கர்மச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான பெஸ்வாடா வில்சன், பட்ஜெட்டில் SRMS (Self-Employment Scheme For Rehabilitation of Manual Scavengers) நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பெஸ்வாடா வில்சன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட SRMS திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது, துரதிஷ்டவசமானது. மத்திய பட்ஜெட்டில் மலக்குழி மரணங்கள் பற்றி ஒரு குறிப்புகூட இல்லை. உ.பி, பீகார், ம.பி, ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் அப்பட்டமாக இத்தகைய அநீதிகள் தொடர்கின்றன.

இதை ஒழிக்க பட்ஜெட் ஒதுக்காத மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன… இந்தக் கொடூர வழக்கத்தை ஒழிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லையா… அவர்களை (தூய்மைப் பணியாளர்கள்) மனிதர்களாக மதிக்கக்கூட மறுத்து விட்டது. இந்த அரசில் மனித மாண்புக்கும், உயிருக்கும் மரியாதை இல்லை போல!

இந்தியாவில், கடந்த 6 மாதங்களில் மட்டும்‌ 43 மலக்குழி மரணங்கள் நடந்துள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இது குறித்த பேச்சே இல்லாமல், மௌனமாகவே இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *