Meloni: இத்தாலி பிரதமர் மெலோனியை கேலி செய்த ஊடகவியலாளர் – ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!| Milan court has ordered a journalist to pay Italian PM 5,000 euros

இதை எதிர்த்து இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், சமூக ஊடகப் பதிவில் கேலி செய்ததற்காகப் பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ்க்கு 5,000 யூரோக்கள் (ரூ. 4,57,215) அபராதம் விதித்து இத்தாலியின் மிலன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மெலோனிபிரதமர் மெலோனி

பிரதமர் மெலோனி

இது தொடர்பாகப் பத்திரிக்கையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் தன் எக்ஸ் பக்கத்தில்,“இத்தாலி அரசாங்கம் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களுடனான கருத்து வேறுபாடு ஆகியவற்றில் கடுமையான சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. தற்போது சுதந்திரமான பத்திரிகையாளர்கள், தலைவர்களுக்கு மோசமான நேரம். நல்ல நாட்கள் வருமென நம்புவோம். இதை அப்படியே விட மாட்டோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜியோர்ஜியா மெலோனியின் வழக்கறிஞர்,“ பிரதமருக்கு வழங்கப்படும் எந்த நஷ்டஈடும் தொண்டு நிறுவனத்திற்குத்தான் செல்லும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *