My v3 ads செயலி Play store ல் இருந்து நீக்கம்

மாபெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான My v3 ads நிறுவனத்தின் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. My v3 ads-ன் செயலிக்கு வைத்த செக் கால் – அதில் முதலீடு செய்துள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு மைவி3 ஏட்ஸ் (My V3 Ads) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதனை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவன செயலியில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதன் மூலமும் வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது.

விளம்பரம்

பல்வேறு ஸ்கிம்கள் இருக்கும் நிலையில் அவற்றில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து, தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை நாள்தோறும் சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க:
தமிழகத்திற்கு இன்று ஆரஞ்ச் அலெர்ட்… எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!

மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியில் லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தனர். மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதன் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் மற்றும் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…


சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…

இதனையடுத்து My V3 தொடர்பான வழக்கை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் Prize Chits & Money Circulation Schemes (Banning) Act, BUDS Act, unregulated deposit scheme உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை டான்பிட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

விளம்பரம்

அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் my V3 ads நிறுவனத்தின் YouTube பக்கத்தில் ஆடியோ மட்டும் அடங்கிய வீடியோ ஒன்று பகிரப்பட்டு உள்ளது. அதில் RETURN OF PROPERTY நடவடிக்கை மூலம் மீண்டும் myv3 ads செயலியை சக்தி ஆனந்தன் கொண்டு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையின் பரிந்துரையைத் தொடர்ந்து, MYV3 ad நிறுவனத்தின் செயலி Play store-ல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

My v3 ads நிறுவன செயலி தற்போது முடக்கப்பட்டுள்ளதால் அதில் முதலீடு செய்துள்ள ஏராளமானோர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *