NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை… மறுதேர்வு கிடையாது!’ – உச்ச நீதிமன்றம் | Supreme court clearly said there is No NEET Re test

மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான நாள்முதல், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் இதில் நடந்திருப்பதாக மாணவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவாகரத்தில் பீகாரில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உட்பட சிலரை சிபிஐ கைதுசெய்ய, மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன.

அவற்றில், மறுதேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. இதை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், `வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது. ஆனால், கசிவின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்” என்று கூறியது. அதேசமயம், தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண்கள் விவரங்களை அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், நீட் மறுதேர்வு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *