அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை. நீட் எனும்பிணியை அழித்தொழிக்க கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசியதேர்வு முகமையின் விளக்கம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை. வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல்வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கூட சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட்தேர்வை ரத்து செய்து பழையபடி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தஆவனசெய்யும்படி புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார். இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.ம.க, நா.த.க, அ.ம.மு.க., பா.ம.க உள்ளிட்டப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். முன்னதாக தமிழ்நாடு மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையாக எதிர்வினை ஆற்றிவந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88