NEET Leak: `300 கோடி இலக்கு; 700 மாணவர்களுக்கு விற்க திட்டம்..!’ – அதிர வைக்கும் Paper Leak மாஃபியா! | NEET scam targeted 700 students, aimed for Rs 300 crore: Paper leak mafia

பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பி.பி.எஸ்.சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வுத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சஞ்சீவ் முகியா என்றும், தொடக்க காலத்தில் அரசு தேர்வை காதில் புளூடூத் செட் அணிந்து தேர்வு எழுதி மாட்டிக்கொண்டதாகவும், தற்போது நீட் தேர்வு ஊழலில் அவரது மகன் ஷிவ் ஈடுபட்டுள்ளதாகவும் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்வு வினாத்தாள்களை கசியவிடும் மிகப்பெரிய மாஃபியா கும்பலுக்கே முதன்மையாக இருப்பவர் பேடி ராம் என்றும், ஜான்பூரில் அவருக்கு உதவியாளராக இருந்தபோது மாணவர் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்காக தாங்கள் வினாத்தாள் கொடுத்து அவருக்கு உதவியதாகவும், அதன் விளைவாக சிறைக்குச் சென்றதாகவும் குப்தா கூறியுள்ளார். தற்போது பேடி ராம் உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

பேடி ராம்பேடி ராம்

பேடி ராம்

நீட் வினாத்தாள் கசிந்துவிடும் என மார்ச் மாதமே வீடியோ வெளியிட்டு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்தார், மேலும் அந்த வீடியோ வைரலானது. 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் (OSSC) தேர்வுத் தாள் கசிவு வழக்கு, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மற்றும் மத்தியப் பிரதேச பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் குப்தா ஈடுபட்டுள்ளார். வினாத்தாள் கசிவு  மற்றும் வினாத்தாள் திருட்டு மற்றும் விற்பனையில் 24 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதோடு, குப்தா இதில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள மாஃபியா பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த பிஜேந்தர் குப்தா, அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது.

பிஜேந்தர் குப்தாபிஜேந்தர் குப்தா

பிஜேந்தர் குப்தா

இதனிடையே இந்தியாவில் அரசு தேர்வுகள் மாஃபியா கும்பலின் தயவில் நடப்பதாக காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் குற்றசம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை ஆதரிப்பவர்கள், வினாத்தாள் மோசடி கும்பலை ஊக்குவிக்கிறார்கள். வினாத்தாள் மோசடி கும்பல், நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றன. கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க-வின் ஊடுருவல் காரணமாக தகுதிவாய்ந்த இந்தியர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *