சில மாநிலங்களில் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனமும், ஆளுநர்கள் பணியிட மாற்ற அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் சபாநாயகர் ஹரிபாஹவு பாக்டே, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பா.ஜ.க மூத்த தலைவர்களான ஓபி மாத்தூர், மைசூர் முன்னாள் எம்.பி சி.எச்.விஜயசங்கர் உள்ளிட்ட 6 புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதிலாக பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.