தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், “இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.

