PM Modi Oath Ceremony (மோடி) : புதிய அரசின் அமைச்சரவையில் 30 பேர்?
இன்று மாலை 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். மோடியைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் பிறரும் பதவி ஏற்பார்கள். அமைச்சரவையில் மொத்தம் 30 பேர் இடம்பெறுவார்கள் எனச் சொல்லப்படும் நிலையில், யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு செய்வதென்ற ஆலோசனை தொடர்ந்து நீடித்து வருவதாக, டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.