நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமைகளை மேற்கோள் காட்டி சில சலுகைகளை பிரிஜ்வல் ரேவண்ணா கேட்டதாகவும், ஆனால் காவல்துறை அவரது கோரிக்கையை மறுத்து, கூடுதல் வசதிகள் எதுவுமில்லாமல் வழக்கமான அறையில் அவரை அடைத்திருப்பதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த சலுகையும் பெற மாட்டார்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ஆடம்பரமான கார்களைத் தவிர்த்து, அவர்களின் பழைய பொலிரோ காரில் மட்டுமே பிரஜ்வால் ரேவண்ணாவை அழைத்துச் செல்லவும் முடிவு செய்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பொது இடங்களில் அவர் அழைத்துச் செல்லப்படும்போது பிரஜ்வல் ரேவண்ணா முகத்தை மறைக்க அனுமதிக்கப்படமாட்டார். அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படாது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பெண்களையும், சிறுமிகளையும் ஆபாசமாக கிட்டத்தட்ட 3,000 வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம் என ஒற்றுமையை தெரிவிக்கும் நோக்கம் கொண்டது என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.