யூடியூப் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களிலும் இவர் பிரபலம். எந்த அரசியல் பின்புலமும், அரசியல் அனுபவமும் இல்லாத இவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சைப்ரஸ் குடியரசு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அப்பகுதியில் போட்டியிட்ட முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து, 19.4% வாக்குகளை பெற்று சைப்ரஸ் வெற்றி பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய தரைக் கடல் தீவு பகுதியில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்ட முன்னணிக் கட்சிகளின் வாக்கு விகிதத்தைவிட அதிகமாகப் பெற்று, மூன்றாவது மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்ட நபராகவும் உருவெடுத்து இருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசிய ஃப்டியாஸ், “நான் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சிறிய நம்பிக்கை இருந்தது. ஆனால், பெரும் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றிபெற செய்வார்கள் எனக் கொஞ்சமும் நினைக்கவில்லை.