Priyanka Gandhi: 20 ஆண்டுகள் பிரசார குரல் டு வேட்பாளர்… பிரியங்காவின் அரசியல் ஃப்ளாஷ்பேக்! | Congress general secretary Priyanka gandhi contest wayanad constituency

நிச்சயம் வெற்றி பெறுவோம் என இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், நினைத்தது நடக்கவில்லையென்றாலும், பா.ஜ.க-வை 240 இடங்களோடு மட்டுப்படுத்தி தனிப்பெரும்பான்மை இழக்க வைத்ததே ஒரு வெற்றியாகப் பார்க்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாமல் தவித்த காங்கிரஸ், 99 இடங்கள் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

பிரியங்கா காந்தி - ராகுல் காந்திபிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

பிரியங்கா காந்தி – ராகுல் காந்தி

இப்படியிருக்க, வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற ராகுல், எந்த தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என்று கேள்வியெழுந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரண்டு அறிவிப்புகள் வெளியிட்டார். ஒன்று, வயநாடு எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார். மற்றொன்று, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்.

பிரியங்கா காந்திபிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

இதன்மூலம், 20 ஆண்டுகளாக மக்கள் முன்னிலையில் காங்கிரஸின் பிரசார குரலாக ஒலித்துவந்த பிரியங்காவுக்கு, நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வயநாடு மக்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்துக்குள் முதல்முறையாகப் பிரியங்கா காலடியெடுத்துவைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *