தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில், தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `நான் உயிரியலாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பரமாத்மா தான் என்னை பூமிக்கு அனுப்பினார்” என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும், `மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அந்த பரமாத்மா தான் என்னை அனுப்பினார்’ என மீண்டும் மோடி அழுத்தமாகக் கூறினார்.
இந்த நிலையில், தான் ஒரு உயிரியல் மனிதன் எனவும், மக்கள்தான் தன்னுடைய கடவுள் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
தான் வெற்றிபெற்ற வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இன்று பேசிய ராகுல் காந்தி, “துரதிஷ்டவசமாக மோடியைப் போல நான் பரமாத்மாவால் அனுப்பிவைக்கப்படவில்லை. நான் உயிரியல் மனிதன். 400 இடங்கள் என்று மோடி கூறியதையும், அது எப்படி 300 இடங்களாகக் குறைந்தது என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள். அதன் பிறகு அவர், நான் உயிரியல் மனிதன் அல்ல.