Reservation: உச்ச நீதிமன்ற உள் ஒதுக்கீடு தீர்ப்பும், விவாதமான `கிரீமிலேயர்’ கருத்தும்! – ஒரு பார்வை | supreme court expressed the need to create and exclude the creamy layer from the sc st reservation

தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய நான்கு நீதிபதிகள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய், ‘எஸ்.சி., எஸ்.டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நீதிபதி பங்கஜ் மித்தல், ‘முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை உயர்ந்த நிலையை எட்டிவிட்டால், இரண்டாம் தலைமுறைக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது’ என்றும், நீதிபதி விக்ரம் நாத், ‘தற்போது ஓ.பி.சி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் இருக்கிறது. இதே நடைமுறையை எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கும் அமல்படுத்த வேண்டும்’ என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *