Russia: தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; காவல்துறை அதிகாரிகள், பாதிரியார் உட்பட 15 பேர் பலி! | 15 people were killed in a shooting by terrorists in Russia

ரஷ்யாவின் தாகெஸ்தானின் மகச்சலாவில் உள்ள ஜெப ஆலயத்திற்கு துப்பாக்கி ஏந்தி வந்த 4 பேரும், அதே நேரம் டெர்பெண்டில் உள்ள தேவாலயத்துக்கும் துப்பாக்கி ஏந்தி வந்த இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாரத தாக்குதலில், காவல்துறை அதிகாரிகள், ஒரு பாதிரியார் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

செர்ஜி மெலிகோவ்செர்ஜி மெலிகோவ்

செர்ஜி மெலிகோவ்

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாகெஸ்தான் ஆளுநர் செர்ஜி மெலிகோவ், “மகச்சலாவில் நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களும், டெர்பென்ட்டில் துப்பாக்கி ஏந்திய இருவரும் நுழைந்து சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், காவல்துறை அதிகாரிகள், டெர்பெண்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். மேலும், இரண்டு தேவாலயங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை காவல்துறை சுட்டுக் கொன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *