Russia Vs Ukraine: முன்னேறி Drone மூலம் தாக்கிய உக்ரைன்; உக்கிரமான ரஷ்யா! | russia missile attack on ukraine after their drone attack

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்த ரஷ்யா, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்நாட்டின்மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. போர் இரண்டாண்டைக் கடந்துவிட்டது, இடையில் உலக நாடுகள் பலவும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தின, ஆனாலும் ரஷ்யாவின் தாக்குதல் நின்றபாடில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவருவதால் போரும் நீண்டுகொண்டே செல்கிறது.

உக்ரைன் தாக்கிய ரஷ்ய அடுக்குமாடிக் குடியிருப்புஉக்ரைன் தாக்கிய ரஷ்ய அடுக்குமாடிக் குடியிருப்பு

உக்ரைன் தாக்கிய ரஷ்ய அடுக்குமாடிக் குடியிருப்பு

இருப்பினும், போரின் தொடக்கம் முதல் ரஷ்யாவே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், கடந்த சில நாள்களாக அமரிக்காவின் ஆயுதங்களுடன் ரஷ்யாவில் உக்ரைன் முன்னேறிவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, ரஷ்ய எல்லையில் ரஸ்தோ என்ற இடத்தில் விமானம் மூலமாக உக்ரைன் குண்டுவீசியதில் 10-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறிருக்க, இன்று காலை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு தென்கிழக்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள சரடோ நகரில் `வோல்கா ஸ்கை (Volga Sky)” அடுக்குமாடிக் குடியிருப்பில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன், ரஷ்யாவிடமிருந்து கடும் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *