SBI, PNB வங்கிகளுக்கு எதிராக கர்நாடக அரசின் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?! | karnataka government suspends all transactions with sbi and pnb

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், பல கோடி ரூபாய் இன்னும் இந்த வங்கிகளிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது என்றும் கர்நாடகா அரசு கூறியிருக்கிறது. ஏற்கெனவே, பழங்குடி மக்களுக்கான கர்நாடகா மகரிஷி வால்மீகி வளர்ச்சிக் கழகத்தில் பழங்குடியினருக்கான நிதி முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று சித்தராமையா அரசு மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ., பி.என்.பி விவகாரம் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்தராமையாசித்தராமையா

சித்தராமையா

இந்த விவகாரம் குறித்து கர்நாடகா மாநில அரசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவருவதாக பி.என்.பி., எஸ்.பி.ஐ ஆகிய இரு வங்கிகளும் தெரிவித்தன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இந்த விவகாரம் குறித்து பேச முடியாது என்று பி.என்.பி., எஸ்.பி.ஐ அதிகாரிகள் கூறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துக்குள் இந்த வங்ககிளுடனான கணக்குகள் அனைத்தையும் முடிக்குமாறு மாநில அரசின் துறைகள், வாரியங்கள் உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் கர்நாடகா அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *