சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக பட்டியல் (SC), பழங்குடியினரின் (ST) கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மாநில அரசு சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க அரசியலமைச் சட்டம் பிரிவு 46 வலியுறுத்துகிறது. அதன்படி, 1974-ல் பழங்குடியினருக்கும், 1979-ல் பட்டியலினத்தவருக்கும் மத்திய அரசின் துணைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், SC, ST நலனுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டமத்திய அரசின் நிதியிலிருந்து ஒரு பகுதியை, மத தலங்கள் மற்றும் பசுக்கள் நலனுக்கு மத்தியப்பிரதேச பா.ஜ.க அரசு ஒதுக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
SC/ST: பட்டியல், பழங்குடியின நலன் நிதியை பசுக்கள் நலன், மத தலங்களுக்கு ஒதுக்கிய ம.பி பாஜக அரசு?! | Madhya pradesh BJP govt diverted Central govt SC ST welfare fund to Cow welfare
