முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் கடந்த ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பணிக்கு அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார்.
Also Read :
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்து சிக்கப் போகும் பிரபல ரவுடி
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை காரணம் காட்டி பலமுறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செ்யதார். ஆனால் அமலாக்கத்துறையின் எதிர்ப்பு காரணமாக அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்டு வருகிறது. செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 48ஆவது முறையாக ஜூலை 22வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் திடீரென செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேற் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
.
- First Published :