Sofia Firdous : ஒடிசாவின் முதல் இஸ்லாமியப் பெண் எம்.எல்.ஏ – யார் இந்த சோஃபியா ஃபிர்தௌஸ்? | Odisha’s First-Ever Woman Muslim MLA Sofia Firdous

அதோடு CREDAI மகளிர் பிரிவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியப் பசுமைக் கட்டடக் குழுவின் (IGBC) புவனேஸ்வருக்கான இணைத் தலைவராகவும், சர்வதேச பெண் தொழிலதிபர்களுக்கான அமைப்பிற்கான (INWEC) முக்கிய பிரதிநிதியாகவும் உள்ளார். தனது தந்தையின் மெட்ரோ கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார்‌. இவரது கணவர் பிரபல தொழிலதிபர் ஷேக் மெராஜ் உல் ஹக் ஆவார்.

இவரது தந்தை பாராபட்டி சுட்டக் தொகுதியில் கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது தந்தை சில ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிலையில், அவருக்குப் பதிலாக சோபிஃயா பாராபட்டி சுட்டக் தொகுதியில் களமிறக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த பூர்ண சந்திரா மஹாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார். இதன் மூலம் ஒடிசாவின் முதல் இஸ்லாமியப் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் சோபிஃயா. அதோடு ஒடிசாவின் முதல் பெண் முதல்வரான நந்தினி சத்பதி, 1972-ல் இதே தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *