Suresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்’ – கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா? | ‘Did not want a ministerial berth…,’ says kerala mp and union minister Suresh Gopi

பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபிபிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

இதுகுறித்து கேரளா அரசியல் விவரப்புள்ளிகள் கூறுகையில், “2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கால்பதித்த பா.ஜ.க-வின் முதல் எம்.பி என்ற வகையில் மத்திய கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் என சுரேஷ் கோபி எதிர்பார்த்துள்ளார். இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சுரேஷ் கோபி அதிருப்தியில் உள்ளர். டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததும் பதவி பிரமாணம் செய்துகொள்ள விரைந்து சென்றார் சுரேஷ் கோபி. ஆனால், இணை அமைச்சர் பதவி என்றதும் அதை கவுரவ குறைச்சலாக எண்ணி பின்வாங்குகிறார். சினிமாவில் நடிப்பதுதான் முக்கியம் என்றால் அமைச்சராக வேண்டும் என டெல்லி அழைத்த உடனேயே தனது கருத்தை கூறி பதவி ஏற்புக்கு செல்லாமல் இருந்திருக்கலாமே. கேபினெட் அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக சுரேஷ் கோபி இப்படி நடந்துகொள்கிறார்” என்றனர். இதற்கிடையே சுரேஷ் கோபிக்கு சினிமாவில் நடிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், அவர் மத்திய அமைச்சராக தொடருவார் எனவும் கேரளா மாநில பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். சுரேஷ் கோபியை சமாதானப்படுத்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான பி.கே.கிருஷ்ணகுமார் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய இணை அமைச்சர் பதவியில் தொடர்வதாக சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் கோபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகபோவதாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்குப் பெருமையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 2 நாள்களாக நடந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *