`தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று `தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது ஏற்கனவே முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நாளை நடைபெற உள்ளது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.