Tamil News Live Today: ஆகஸ்ட் 23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

 ஆகஸ்ட் 23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் ஆண்டுகள் கடந்து நீடித்து வரும் சூழலில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்யா சென்றிருந்தார். அது உக்ரைன் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உக்ரைன் செல்லும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, “போலாந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மோடி ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்தியா – போலாந்து இடையேயான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 70-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த பயணம் அமைய உள்ளது.

மோடி – ஜெலன்ஸ்கி

மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர்  மோடி  ஆகஸ்ட் 23 ஆம் உக்ரைனுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் 30 ஆண்டுகளுக்கும் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *