மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்து!
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்ஜா விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்பு, மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக டிஎம், எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.