NIA Raid; சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.