திருநங்கைகளை சிறப்பு பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தவித அரசு வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தால், சம்பந்தப்பட்ட நபர் அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், “மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக்கருதி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இட ஒதுக்கீட்டு சலுகைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும், இது தொடர்பாக மத்திய அரசோ, மாநில அரசோ விதிகளை வகுக்கவில்லை.