சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே கர்நாடகாவில் எடுக்கப்பட்டது. அதை ஏன் அவர்கள் வெளியிடவில்லை?. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 140 கோடி மக்களையும் நீங்கள் எந்த சாதி என்றுதான் கேட்டு, அதன்படி தான் கணக்கெடுப்பு நடத்த முடியும். ஒவ்வொரு மக்களையும் அதே போன்று கேட்கும் போது வராத கோபம், ராகுல் காந்தியை கேட்கும் போது மட்டும் கனிமொழிக்கு ஏன் கோபம் வருகிறது? 140 கோடி மக்களையும் நீங்கள் எந்த சாதி என்று கேட்டு கணக்கெடுப்பு நடத்தும்போது சரி என்றால், ராகுல் காந்தியைப் பார்த்து கேட்கும்போது மட்டும் எப்படி நாகரிகமற்ற செயலாக அது மாறும்? அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக லண்டன் செல்கிறார். அதை இன்னும் அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதல்வரின் அமெரிக்கா பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முதலீடு ஈர்ப்பதற்காக செல்கிறாரா அல்லது முதலீடு செய்ய செய்கிறாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
ஏனென்றால், ஏற்கெனவே துபாய் முதலீடு பயணத்தில் என்னென்ன முதலீடு வந்தது என்பது இதுவரை தெரியவில்லை. முதல்வருக்கும் வாழ்த்துகள். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆவதால் தமிழக அரசியலிலோ, நிர்வாகத்திலோ என்ன மாற்றம் ஏற்படபி போகிறது… ஒரு மாற்றமும் ஏற்படாது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஏதோ குழப்பம் நடந்து கொண்டுள்ளது. பொறுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. ஆளுநர் அளிக்கும் விருந்தில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், தி.மு.க கூட்டணியில் தி.மு.க-வை தவிர எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை பேச்சு முதிர்ச்சியற்ற பேச்சு என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அப்படியென்றால், உதயகுமார் பேச்சு மட்டும் மகிழ்ச்சி தரும் பேச்சா… பா.ஜ.க தலைவர் குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88