என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டின் மக்கள் அனைவர் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதையும், நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை மாநாட்டில் சொல்வோம். அப்போது இந்தக் கொடிக்கான விளக்கத்தையும் கூறுவோம்.
அதுவரை ‘கெத்தா’ இந்தக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றி, அனைவரிடமும் தோழமை பாராட்டி இதை ஏற்றிக் கொண்டாடுவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் அறிமுகப்படுத்தியிருக்கும் த.வெ.க கொடியில், சிவப்பு, மஞ்சள் நிறங்கள்… இரட்டை யானைகள், மையத்தில் வட்ட வடிவத்துக்குள் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கொடி குறித்தான விளக்கத்தை மாநாட்டில் தெரிவிப்பதாக, விஜய் குறிப்பிட்டிருக்கிறார்!