Union Budget: சிறப்பு மாநில அந்தஸ்து `நோ’… சிறப்பு நிதி `ஓகே’ – கவனிக்கப்பட்ட பீகார், ஆந்திரா | Finance Minister announced Special Financial Support for bihar and Andhra

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற நமது அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு அமைப்புகள் மூலம் சிறப்பு நிதியுதவியை வழங்குவோம். நடப்பு நிதியாண்டுக்காக, 15,000 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யப்படும். வருங்கால ஆண்டுகளில் கூடுதல் தொகை ஒதுக்கப்படும். ஆந்திரா மற்றும் அதன் விவசாய சமூகத்திற்கு முக்கியமான பொல்லாவரம் பாசனத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்து அந்த திட்டத்தை முடித்துவைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் - பட்ஜெட் - பொருளாதார ஆய்வறிக்கைநிர்மலா சீதாராமன் - பட்ஜெட் - பொருளாதார ஆய்வறிக்கை

நிர்மலா சீதாராமன் – பட்ஜெட் – பொருளாதார ஆய்வறிக்கை

இந்த ஆண்டு, மூலதன முதலீட்டை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்படும். இதுதவிர பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் “பூர்வோதயா’ என்ற பெயரில் ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *