இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையென்றும், இரண்டு (பீகார், ஆந்திரா) மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கூறுகின்றனர். காங்கிரஸ் இந்த நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. பல பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து பட்ஜெட்டுகளிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த பிப்ரவரி மற்றும்இப்போது தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. உதாரணமாக இதில், மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், மகாராஷ்டிராவின் வடாவன் பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. இதற்கு, ரூ. 76,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது, மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடாததால், மகாராஷ்டிரா புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தமா… சில மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாததால் இந்திய அரசின் திட்டங்கள் அங்கு செல்லாது என்று அர்த்தமா…
ஆனால், நம் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிதான் இது. நான் சவால் விடுகிறேன், காங்கிரஸ் தனது முந்தைய பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டிருக்கிறதா?” என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.
இதே போல, செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.” என தெரிவித்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு என அதிரடி ஆட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88