மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, மிடில் கிளாஸ் மக்களின் மனக்குமுறல்களால் நிறைந்தது சோஷியல் மீடியா.
ஆனால், ‘இது புதிய நடுத்தர மக்களுக்கு அதிகாரம் தரும் பட்ஜெட்’ என்று பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. எல்லா சட்டவிதிகளையும் மதித்து, தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் தியாகம் செய்துவிட்டு முறையாக வரியைச் செலுத்திவரும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த அரசாங்கம் எதையுமே மிச்சம் வைக்கவில்லை என்பதுதான் உண்மை.வருமான வரியைச் செலுத்திவிட்டு மிச்சமிருக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி, எதிர்காலத்துக்காக ஏதேனும் கொஞ்சம் சேமித்தால் அதற்கும் வட்டியைக் குறைத்துவிட்டார்கள்.
அந்தச் சேமிப்பு முதிர்வடையும்போது அதற்கும் வரி செலுத்த வேண்டும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபட்டால், அதற்கும் தனியாக வரி. வீட்டு வாடகை எவ்வளவு உயர்ந்தாலும், வருமான வரி விகிதத்தில் வீட்டு வாடகைப் படிக்கான தள்ளுபடி உயரவில்லை. சிரமப்பட்டுக் கடன் வாங்கி வீடு கட்டி அதற்கு வருமான வரி விலக்கு பெறலாம் என்றால், புதிய வரி விகிதத்தில் அதற்கும் வாய்ப்பில்லாமல் செய்துவிட்டார்கள். நாட்டின் கட்டமைப்புக்காக வரியாகப் பெரும் பணத்தை அளிப்பது மிடில் கிளாஸ் சமூகம். ஆனால், முதுமைக்கால நோய்களுக்கான சிகிச்சைக்கோ, கடைசிக்காலத்தில் வாழ்க்கையை ஓட்ட பென்ஷனுக்கோ வாய்ப்பில்லாத சாதாரண மிடில் கிளாஸ் குடிமகனுக்கு இந்த தேசம் பதிலுக்கு எதுவும் அளிப்பதில்லை என்பதுதான் துயரம்.
இதுதொடர்பான முழுமையான வீடியோவைக்காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்