UPSC: பூஜா IAS சர்ச்சையை தொடர்ந்து… மேலும் ஒரு IAS அதிகாரி மீது மோசடி புகார்! | Trainee IAS Officer Pooja Followed by Another IAS Officer in Fake Disability Certificate Scam

மகாராஷ்டிராவில் இருந்து 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில் வெற்றி பெற்று புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக சேர்ந்த பூஜா கேட்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர் புனேயில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது, பல்வேறு சலுகைகள் கொடுக்கவேண்டும் என்று கூறி தனது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தந்தை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். இச்சர்ச்சையை தொடர்ந்து அப்பெண் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவர் செய்த தில்லுமுல்லு வேலைகளும் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.

தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாக போலியான சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளி என தேர்வில் இடஒதுக்கீடு பெற்றார். அதோடு சாதி இட ஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகள் பெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரித்து வருகின்றன.

பூஜாவை போன்று அபிஷேக் சிங் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி யு.பி.எஸ்.சி தேர்வில் மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2011-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியில் சேர்ந்த அபிஷேக் சிங் கடந்த ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவர் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவர் மாற்றுத்திறனாளி சலுகையில் வேலையில் சேர்ந்ததாக இப்போது புகார் எழுந்துள்ளது.

இப்புகார் குறித்து அபிஷேக் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,”‘நான் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கொடுப்பதால் என் மீது இது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இப்புகார்களை முன் வைக்கின்றனர். எனது வேலை, எனது சாதி குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். எனது கடின உழைப்பால் தேர்வில் என்னால் சாதிக்க முடிந்தது. இட ஒதுக்கீட்டால் இப்பணிக்கு வரவில்லை. என் மீதான விமர்சனம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. இது போன்ற விமர்சனங்களை முதல் முறையாக எதிர்கொள்கிறேன். நான் மக்கள் தொகை அடிப்படையில் அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவன். அதற்காக பாடுபடுவேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *