மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத்தில், Lateral Entry எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதை எதிர்த்த மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, ஈ.டபிள்யூ.எஸ் பணியிடங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பா.ஜ.க-வின் “சக்கரவியூகம்’ இது” என்றனர்.