US Election:`கமலா ஹாரிஸ் இந்தியரா, ஆப்ரிக்க அமெரிக்கரா?’ – ட்ரம்ப் விமர்சனமும் வெள்ளை மாளிகை பதிலும் | is she Indian or is she black trumb question about kamala harris

டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துகளை பேசியிருக்கிறார். அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது, ‘பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை” எனக் குற்றம்ச்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். தற்போது அதே போன்ற ஒரு கருத்தை கமலா ஹாரிஸ் மீதும் முன்வைத்திருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்பின் கருத்தை கடுமையாக கண்டித்து மறுத்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், “டொனால்ட் ட்ரம்பின் கருத்து அவமதிப்பதாகும். ஒருவரின் அடையாளம் குறித்து அது சம்பந்தப்பட்டவர் மட்டுமே பேச முடியும்.

டொனால்ட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

ஒருவரை, அவர்கள் யார், அவர்கள் தங்கள் அடையாளத்தை எப்படி வெளிக்காட்டுகிறார்கள் என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரவர்களின் சொந்த முடிவு. அவர்களால் மட்டுமே தன் அனுபவத்தை பேச முடியும். தற்போது விமர்சிக்கப்பட்டவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி, அவரின் பெயருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *