இந்த நிலையில், அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி தர தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, பென்சில்வேனியாவில் நேற்று நடைபெற்ற ஒரு பிரச்சாரத்தின்போது ட்ரம்ப்பிடம், அவரின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அங்கம் வகிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு உற்சாகமாகப் பதிலளித்த ட்ரம்ப், “அவர் மிகவும் புத்திசாலி. நிச்சயமாக அவரை நான் தேர்வுசெய்வேன்” என்றார்.
ட்ரம்ப்பின் இத்தகைய கூற்று பேசுபொருளாகியிருக்கும் நிலையில், “சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என எலான் மஸ்க்கும் தனது X சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்து க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். மேலும், இந்த ட்வீட்டுடன் எலான் மஸ்க் பதிவிட்டிருக்கும் தன்னுடைய புகைப்படத்தில் `Department of Government Efficiency’ என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88