US Elections: `ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது இலகுவானது!’ – டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump says kamala Harris will be easier to defeat than joe Biden

அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது. ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும், அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலுக்கும் மத்தியில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், “இந்த தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிப்பதைவிட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது மிகவும் இலகுவானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்

ட்ரம்ப் – கமலா ஹாரிஸ்

அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், `ஜோ பைடன் நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான அதிபராக இருந்து, பதவி இழக்கிறார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். தற்போதுவரை பொய்கள், போலிச் செய்திகளால் மட்டுமே தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *