Video Conference-ல் கூடிய திமுக மாவட்டச் செயலாளர்கள்… கூட்டத்தில் நடந்தது என்ன? | What happened in DMK district secretaries meeting?

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, ஜூன் 1-ம் தேதி காலை 11 மணிக்குக் காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமாக வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *