ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்தே விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை, தமிழகத்தில் திமுக-விற்கு செல்வாக்கு கூடியுள்ளது என்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மக்களை விலைபேசி வாங்கப்பெற்ற வெற்றியாகும்.
திமுக-வுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு கொள்கை கிடையாது, திமுக-வின் கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கை இல்லை, மக்களின் மனநிலை மாறக்கூடியது, திமுக எத்தனையோ இடைத்தேர்தல்களை புறக்கணித்து உள்ளதே?


2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுக-வும் தனித்துப் போட்டியிடும், ஓபிஎஸ் அதிமுக-வில் இருந்த காலகட்டத்திலும் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். திமுக நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,
பாஜக-வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது என கூற முடியாது, எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்த காலத்திலும் பாஜக தமிழகத்தை ஆள முடியாது.
பாஜக, தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் வெற்றி பெற முடியாது. எம்.ஜி.ஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் எனும் இளைஞர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர்தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும், நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்றவர், “தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” எனக் கூறினார்.