Waqf: வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு… ஒவைசி உட்பட 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு | parliamentary joint committee formed to review Waqf Amendment bill 2024

வக்பு (Waqf) சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெறச் செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருக்கிறது.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இதனை, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்துவருகின்றன. இந்தநிலையில், வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜ.க எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

வக்பு சட்ட திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டு குழுவக்பு சட்ட திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டு குழு

வக்பு சட்ட திருத்த மசோதா – நாடாளுமன்ற கூட்டு குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *