`அஜித் பவார் மீண்டும் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா…’ – சரத் பவார் அளித்த பதில் என்ன? | ‘Everyone has a place…’: What Sharad Pawar said on nephew Ajit’s likely return

அவர்களை சரத் பவார் கட்சிக்கு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய சரத் பவாரிடம் அஜித் பவார் மீண்டும் உங்களிடம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத் பவார், “‘அனைவருக்கும் வீட்டில் இடமுண்டு. ஆனால் கட்சியை பொறுத்தவரை நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. என்னுடன் இருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்”என்று தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அஜித் பவார் ஆதரவாளர்கள் அணி மாறி இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. புனேயில் தான் அஜித் பவாருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதினார். ஆனால் அதற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சரத் பவார் அளித்திருந்த பேட்டியில், ”கட்சியை பலவீனப்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்களை மீண்டும் கட்சிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாத தலைவர்களை ஏற்றுக்கொள்வோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *