“அரசியலுக்கு வருவதை என் மனைவி விரும்பவில்லை’’ – ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஓப்பன் டாக்! | No interest in politics – Former RBI Governor Raghuram Rajan

இப்படி பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலில் பின்னணியில் இருந்து செயல்படும் ரகுராஜன் ராஜன், ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு சமீபத்தில் பதில் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது பற்றி சொல்லி இருக்கிறார்.

-ரகுராம் ராஜன்-ரகுராம் ராஜன்

-ரகுராம் ராஜன்

அது பற்றி அவர் சொன்னதாவது: ‘‘அடிப்படையில் நான் கல்வித் துறை சார்ந்த ‘அகடமிக்’ எனத் திரும்பத் திரும்ப சொன்னாலும், பலரும் அதை நம்ப மறுக்கிறார்கள். என் வேலை குழந்தைகளைக் கொஞ்சி, பெயர் வைப்பதல்ல. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது; குழந்தைகள் இருக்கிறார்கள். என் நல்லதுக்காக நான் அரசியலுக்கு வரவேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள். நான் அரசியலில் வெளிப்படையாக செயல்படுவதைவிட, யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஆலோசனை சொல்வதே என அவர்கள் நினைக்கிறார்கள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது நேரடியாக அரசியலுக்கு வராமல் இருக்கும் ரகுராம் ராஜன், இனிவரும் காலத்திலாவது வருவாரா அல்லது பின்னால் இருந்தே ஆலோசனை செல்லும் ராஜகுருவாக இருப்பாரா என்பது போகப் போகத் தெரியும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *