சாதி மறுப்பு திருமணம் செய்றவங்க பாதுகாப்பு கொடுங்கன்னு கேட்கிறபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பாதுகாப்பு கொடுக்கிற பணியை, இன்றைக்கு மட்டுமில்ல என்றைக்கும் அதை நாங்கள் செய்வோம். சாதி மறுப்பு திருமணம் செய்கின்ற தம்பதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பு கேடயமாக திகழும். அரசு இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிற வேலையை செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலை, பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு வீடு, அவர்களுக்கான வருமானம் போன்றவற்றை அரசு உத்தரவாதமளிக்க வேண்டும். அதனை அரசு செய்ய வில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே அதனை செய்யும். சாதி மறுப்புத் திருமணம் சமூகவளர்ச்சியோட அடுத்த கட்டம்.
சில சாதிய அமைப்புகள் தான் இந்த மாதிரியான பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்குகின்றன. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கூட இதற்கு மேல் பிரச்சனை வேண்டாம் என்று இருந்தால் கூட சாதியை வைத்துக் கொண்டு இதனை தணியவிடாமல் ஊதிப் பெரிதாக்குகின்றன” என்று கூறினார்.
தொடர்ந்து திருநெல்வேலி மாஞ்சோலை தொழிலாளர்கள் நிலை பற்றி பேசுகையில், ” மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88